திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

0
186
#image_title

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்துங்கள் என அறிவுறுத்தினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, 234 தொகுதியில் இருந்தும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுகவில் கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கி வைத்தார் .புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில் புதிதாக 1 கோடி உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதபடுத்த வேண்டும்.

மாவட்ட செயலாளரை விட தொகுதி பார்வையாளர்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். தொகுதி பார்வையாளர்கள் பணி தான் வெற்றிக்கு அடித்தளம். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

author avatar
Savitha