குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

0
64

2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருக்கின்ற 16 வார்டுகளில் திமுக 8 இடங்களில் அபார வெற்றியடைந்தது. அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக காய் நகர்த்தியது .ஆனால் திமுக சார்பில் வெற்றியடைந்த 8வது வார்டு உறுப்பினர் செல்வம் அதிமுகவிற்கு தாவினார். இதன் காரணமாக திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 ஆக குறைந்து போனது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு பலமுறை திட்டம் போடப்பட்டது. ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு கொண்டே வந்தது. இதன் காரணமாக ,தலைவர் மற்றும் துணைத் தலைவர் அவர்கள் வெகு காலமாக காலியாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மறைமுக தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்தது.அதனடிப்படையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் நடைபெற்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த தேர்தலில் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் தங்கவேல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊர் தான் இந்த பெரியகுளம் அங்கே அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதோடு அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் ஆதரவுடன் திமுக தலைவர் பதவியை கையகப்படுத்தியது அதிமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.