ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! 

0
263
DMK wins in Erode election.. Exciting update from DMK leader!! Hot elections!!
DMK wins in Erode election.. Exciting update from DMK leader!! Hot elections!!

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!!

சட்டமன்ற கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் அதிமுக தென்னரசுவை நிற்கவைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் மேலும் ஆளும் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இளங்கோவன் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறது. மேலும் தேமுதிக அவரது கட்சி சார்பாக ஆனந்த் என்பவரை நிற்க வைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் பாமக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என்றும் வேட்பாளரை நிற்கவைக்கவில்லை என்றும் இந்த தேர்தலில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் தான் தங்களது பலத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் ஈரோடு கிழக்கு சட்டமன்றம் முழுவதும் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். எனவே மக்களுக்கு பண பட்டுவாடா செய்யப்படுகிறது என்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது எனக் கூறி தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததோடு இந்த தேர்தலை ரத்து செய்யும்படியும் கூறினர். ஆனால் எந்த ஒரு அதிகாரையும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ? பணத்தை பிரதானப்படுத்தி மக்களை சந்திப்பது சரிதானா? ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்றுவிட்டதாக அறிவிக்க வேண்டியது தானே.

https://twitter.com/iVijayakant/status/1628674425494327296

இங்கு நியாயமான முறையில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளின் நிலை என்ன? இனியாவது ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்களும் தவிர்க்க வேண்டும்.

https://twitter.com/iVijayakant/status/1628674461967998976

ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்கள் தவிர்ப்பதோடு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.