வேலூர் தொகுதி! திமுக வெற்றி உறுதி? அதிமுகவே காரணம், சோகத்தில் OPS, EPS?

0
75

திமுகவின் வெற்றி உறுதி ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு அதிமுக விடை அளித்துவிட்டதாக திமுக தரப்பில் கட்சியினர் கூறுகின்றனர். வெற்றிக்கு காரணம் ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத் தான் காரணம் எனவும் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் செய்தார் MP ரவீந்தரநாத்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக வெற்றி உறுதி என திமுகவினர் கூற காரணம் என்னவென்றால், முத்தலாக் தடை சட்டத்திற்கு ஓ. பி.எஸ் மகன் ரவீந்தரநாத் மக்களவையில் ஆதரித்ததே காரணம் என கூறுகின்றனர். முத்தலாக் தடை சட்டத்தை கடந்த மோடி ஆட்சியின் போது நிறைவேற்ற முடியவில்லை. காரணம் பெரும்மான்மை இல்லாத நிலை தான். அதனால் முத்தலாக் தடை சட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்பு மீண்டும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் அந்த சட்டத்தை ஏற்ற பிஜேபி முனைப்பு காட்டியது.

மக்களவையில் தற்போது பிஜேபிக்கு பெரும்மான்மை இருப்பதால் இந்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஆதரவு கோரிய பொழுது அதிமுகவின் ரவீந்திரநாத் மட்டும் ஆதரவு தெரிவித்தார். மீண்டும் மாநில அவையில் முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு கோரிய பொழுது அதிமுக எதிராக வெளிநடப்பு செய்தனர்.

இருந்த போதிலும் பிஜேபி பெரும்மாண்மை உள்ளதால் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் திமுக இரண்டு அவையிலும் எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். சரி இதற்கு வேலூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்.

வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் பகுதி ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் பெரும்பாலும் முஸ்லீம்கள் ஏறக்குறைய 4 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் பகுதி அது. முத்தலாக் தடை சட்டத்திற்கு அதிமுக ரவீந்தரநாத் மக்களவையில் ஆதரவு கொரியதால் , அந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்பதால் அதிமுகவை புறக்கணிக்க கூடும் என கூறுகின்றனர்.

இதனால் திமுக வெற்றிக்கு அதிமுக MP ரவீந்தரநாத் முக்கிய காரணம் என திமுகவினர் கூறுகின்றனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வெற்றி யார் பக்கம் என்பதை தேர்தல் முடிந்தால் தான் தெரியும்.

மேலும் படிக்க : சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K