பிரசாந்த் கிஷோரை அளறவிட்ட ரஜினிகாந்த்!

0
57

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்று திமுக தலைமை நினைத்து வருகின்றது நடிகர் ரஜினிகாந்தும் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கின்றார் இந்த நிலையில் திமுகவின் வெற்றி ரஜினிகாந்த் ஆல் பாதிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் திமுகவின் தேர்தல் வியூக பொறுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய நெருக்கமானவர்களிடம் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் திமுகவிற்கு தான் வெற்றி என நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனாலும் ரஜினி அரசியலுக்கு வந்த பிறகு நிலைமை கைமீறிப் போய்விட்டது அவருடைய கட்சியால் திமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் பெரும்பான்மை கிடைப்பது சந்தேகம் தான் என்று டெல்லி வட்டாரத்தில் பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த நிலையில், இந்த விஷயத்தை கேள்வியுற்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி மூலம் அந்த கட்சி பணிக்குள் நுழைந்தார் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கும் தலைமையின் உறவினர்கள் மூலமாக கட்சியின் பணிகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றார் என்று கோபப்பட்டார்.

அதேவேளையில், திமுகவின் நிலையோ பரிதாபமாகத்தான் இருக்கிறது. எப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிக்கை விட்டாரோ அதிலிருந்தே திமுகவின் தலைமைக்கு பயம் தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதோடு ரஜினிகாந்த் அவர்களின் பணிகள் வேகம் எடுக்க எடுக்க திமுகவின் பயம் அதிகமாகிக் கொண்டே போகின்றது .அதோடு திமுகவில் இருப்பவர்களே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர் பக்கம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேசப்பட அது திமுக தலைமையின் காதுக்கு செல்ல ஸ்டாலின் அவர்களுக்கு மேலும் பயம் ஆகிப்போனது.அதோடு திமுகவின் நிர்வாகிகளில் பலர் ரஜினியின் அரசியல் வருகைக்குப் பின்னர் அவர் கட்சியில் இணைவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் சந்தித்த கமல்ஹாசனுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் உறுதியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலினுடைய இந்த முயற்சி ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தனக்கு ஏற்படப்போகும் பலவீனத்தை சரி செய்யும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவின் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அவர்களும் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து கவலையுற்று இருப்பது ஸ்டாலினுக்கு மேலும் அச்சம் ஆகி இருக்கின்றது. ஆனால் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வதாக சொல்வது எந்த அளவிற்கு திமுகவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் ரஜினியும், கமலும் நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் எதிர், எதிர் துருவங்கள் ஆகவே இருந்து விடுவார்களோ என்ற தோற்றம் தான் தென்படுகிறது. ஆனாலும் கொள்கை ஒத்துப் போனால் நாங்கள் இருவரும் இணைந்து செயலாற்றுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.