தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
124

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 15 தொகுதிகளை கேட்டு இருக்கிறது அந்த கட்சியின் தலைமை. அதில் ஐந்து பொது தொகுதிகளும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது. எந்த தொகுதியில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் காலை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை செய்து வந்தார். அந்த சமயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் எல்லோரும் ஒரே கருத்தாக 10 தொகுதிகளுக்கு கீழே திமுக கொடுக்கும் என்றால் நாம் தனியாகவே போட்டியிடலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு இடையில் திமுகவுடன் நடைபெறவிருந்த இரண்டாவது கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை திருமாவளவன் புறக்கணித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருமாவளவன் கேட்ட தொகுதிகளை திமுக தரப்பில் கொடுக்க மறுத்ததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் திமுக தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதில் நான்கு தனித் தொகுதிகளிலும், இரண்டு பொது தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற கட்சிகளுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த அளவிற்கு அந்தக் கட்சி இறங்கி போகவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் அந்தக் கட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் பெரிய அளவில் எந்த விஷயத்திலும் திமுகவிற்கு உதவியாக இருக்கப்போவது இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அந்த கட்சியை வைத்து ஒரு சில முக்கிய அரசியல் கணக்குகளை திமுக போட்டி இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த கட்சியை வைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த வாக்குகளை பெறுவதிலும் அந்த சமூக மக்களை வைத்து அரசியலில் சித்து விளையாட்டை தொடங்குவதுதான் திமுகவின் திட்டம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை தன்னுடைய கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் ஆனால் அது தன்னுடைய திட்டத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்று ஸ்டாலின் கருதியதால் திருமாவளவன் விவகாரத்தில் அவர் சற்றே இறங்கி வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனாலும் திருமாவளவன் இந்த கூட்டத்தை புறக்கணிப்பு செய்திருப்பது ஸ்டாலின் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

திருமாவளவன் இந்தக் கூட்டத்தை புறக்கணித்து இருப்பது தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக இன்னொரு அணி உருவாவதற்கான தொடக்கமே என்று ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனை தெரிந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திருமாவளவனிடம் சமாதானப் பேச்சை ஆரம்பித்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் திருமாவளவன் தன் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணியில் இருக்கலாமா அல்லது வெளியேறலாமா என்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.