உள்த்துறை அமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்!

0
96

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை அடைந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது இதனை தொடர்ந்து வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில், அதிமுக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தத் தேர்தலில் திமுக சார்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக களமிறங்கினார். ஆரம்பம் முதலே திமுகவின் கோட்டையாக இருந்து வரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அவர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. எல்லோரையும் மூக்கின்மேல் விரல் வைக்க வைத்தது ஏனென்றால் எப்போதுமே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுகவின் கோட்டை ஆகவே இருந்து உள்ளது. அதனால் நிச்சயமாக இந்த தொகுதியில் உதயநிதி வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையுடன் திமுக தலைவர் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் உதயநிதிஸ்டாலின் மாபெரும் வெற்றியை அடைந்தார். இந்த நிலையில், சென்னையில் இருக்கின்ற புதுப்பேட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அவர் அப்போது தெரிவித்ததாவது தற்போது கிடைத்திருக்கின்றன வெற்றி என்னுடைய தாத்தா மற்றும் அப்பா ஆகியோருக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே இந்த தொகுதி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்த அவர் நான்கு தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் எனக்கு பதவி கொடுக்கிறார்களா அல்லது நான் சட்டசபை உறுப்பினராக மட்டும் பணியாற்ற போகிறேன் என்பது உங்களுக்கு தெரிய வரும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் நான்கு இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிலையில், திமுக தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது அதாவது உள்துறை அமைச்சர் போன்ற மிக முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது