அரசின் சாதனைகளை சட்டசபையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

0
72

நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசினார் என்று சட்டசபையில் தன்னுடைய பேச்சை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நோய் தொற்றைத் தடுக்கும் என்பது தடுப்பூசி தான் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்திலேயே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 8.0 9% மட்டும்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த அளவில்தான் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இருந்தார்கள் 2.84 சதவீதம் மட்டும்தான் அதாவது முதல் 4 மாதங்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் அளவு இவ்வளவு தான் ஆனால் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 7 மாதங்களில் பொது மக்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வை உண்டாக்கி தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை இப்பொது மக்கள் இயக்கமாக மாற்றினோம் என தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் தமிழக மக்களில் 87.27 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் 61.75 சதவீதம் மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 8.76 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஜனவரி மாதம் 3ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்து வைத்தேன் என குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 60 வயதிற்கும் மேற்பட்ட எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்கள பணியாளர்களுக்கும் கூடுதல் தவணையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய வகை நோய் பரவல் ஏற்பட்டாலும் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசியை பெரும்பாலனவர்களுக்கு செலுத்தியது தான் காரணம் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

நோய்த் தொற்று இருக்கும் வார்டுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன் சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக் கவசம் அணிவித்தேன் ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று எண்ணம்தான் இதற்கு காரணம் உங்களின் அரசாக மட்டுமல்லாமல், உயிர் காக்கும் அரசாக இந்த அரசு இயங்கி வருகிறது என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது என்று தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரத் துறை சார்பாக மட்டுமல்லாமல் அனைத்து துறைகளும் இந்த அரசை பொறுத்தவரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை தான் அந்த எண்ணத்துடன் தான் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் என்றார். ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன அவற்றில் நாற்பத்தி ஒன்பது அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது என்பதை பெருமையுடன் இந்த மன்றத்தில் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மீதம் இருக்கின்ற 17 அறிவிப்புகளில் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பவை மூன்று இன்னும் அரசாணை வெளியிட வேண்டிய அறிவிப்புகள் 14 என்ற நிலையில் இருக்கிறது இவை ஏதோ அறிவிப்புகள் ஆக மட்டுமில்லாமல் வெளியிட்ட அறிவிப்புகள் ஆறுமாதத்தில் 75% அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது ஆகவே இந்த அரசு அறிவிப்போடு நிற்பதில்லை அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகின்ற அரசு என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சொற்கள் தனிமனிதனுடைய வெறும் சொற்களாக மட்டுமல்லாமல் அரசாங்கத்தினுடைய ஆடைகளாக அதனை மாற்றி வருகின்றோம் இந்த ஆணைகள் எல்லாவற்றிற்கும் செயல்வடிவம் வழங்கியும் வருகின்றோம். அந்த அரசாணையில் மிக முக்கியமான வரிகளை மற்றும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, நோய்த்தொற்றுகள் நிவாரணமாக, 4 ஆயிரம் ரூபாய் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட அரசு ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட்டு இருக்கின்றன என தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு 317 கோடியிலான பல்வேறு திட்டங்கள் பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாட்டம், மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவி தொகை 5 ஆயிரத்திலிருந்து ஆயிரமாக உயர்வு விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கும் மணிமண்டபம், நேசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு சதவீதம் வரி ரத்து, அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்களும் தமிழக வரலாற்றில் முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழு மூலமாக பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து இவ்வாறு எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கின்ற அரசுதான் இந்த அரசு உங்கள் அரசு என தெரிவித்திருக்கிறார்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக சார்பாக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, குறுகிய காலத்தில் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு அவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதற்கான கால அவகாசம் என்பது ஐந்து ஆண்டுகள் அதை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதுதான் தேர்தல் அறிக்கையின் சாராம்சம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கேட்பதற்கு முழுமையான உரிமை பெற்றவர்கள் எங்களுக்கு வாக்களித்தவர்கள் ஏனென்றால் நம்பி எங்களுக்கு வாக்களித்தார்கள் அவர்கள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் பரவாயில்லை ஏன் பரவாயில்லை என்று சொல்கிறேன் என்றால் வாக்காளர்களுக்கு எந்த அவநம்பிக்கையும் ஏற்படவில்லை. ஆகவே அவர்கள் எங்களை நம்பி கொண்டு இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் என்ன தவறு நடந்தது என்று.

நான் முன்பே தெரிவித்து இருக்கிறேன் அதன் அடிப்படையில் படிப்படியாக முறையாக உரிய காலத்தில் உரிய அளவிற்கு நிச்சயமாக அது நிறைவேற்றப்படும். அண்ணாவின் சொற்களை எல்லோரும் ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து ஏற்க வேண்டும் என்று நான் மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த ஆளுநர் உரையில் மிக, மிக, முக்கிய திட்டமாக எல்லா அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் என்ற திட்டம் அதாவது திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்குகின்ற திட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இருக்கின்ற 24345 தொடக்கப் பள்ளிகளிலும், திறன்மிகு வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். அரசுப்பள்ளிகள் அரசுப்பள்ளிகளில் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள் இந்தியாவிற்கு முன்னோடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற பெயர் கிடைத்திட இந்த அரசு தன்னுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சட்டசபையில் உரையாற்றி இருக்கிறார்.