முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

0
73

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் ஆகியவை சம்பந்தமாக திருப்பூர் நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய இருக்கின்றார்.

கொரோனா தடுப்பு பணிகள் சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், நேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இதுவரையில், 20 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் முதல் அமைச்சர் கொரோனா பணிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து இருக்கின்றார்.

அதோடு அந்த மாவட்டங்களில் பல முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தும், புதிய திட்டம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகின்றார்.பல தொழில் முனைவோர்களுடனும், விவசாய பிரதிநிதிகள், மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடனும்,ஆலோசனை செய்து வருகின்றார் .

இந்த நிலையில் வரும் ஆறாம் தேதி திருப்பூர், மற்றும் நீலகிரி, மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவை சம்மந்தமாக ஆய்வு செய்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில், வரவிருக்கும் நிலையில், முதல்வரின் இந்த அதிரடி சுற்றுப்பயணமானது, அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் திமுக உள்பட எதிர்கட்சிகள் முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தை விமர்சித்து வருகிறார்கள். கொரோனாவை காரணம் காட்டி, எங்களை கூட்டம் நடத்த கூடாது என்று சொல்லிவிட்டு முதல்வர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.