வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

0
61

காலத்திற்கு தேவையான வழிமுறைகளை சொல்வது இல்லை. அதே நேரம் நாங்கள் ஏதாவது செய்தால், உடனடியாக அதற்கு தடை போடுகிறார்கள். மொத்தத்தில் வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாகத்தான் இருக்கிறது .என்று வெடிக்கிறார் வடமாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர்.

திமுகவின் சட்டசபை தேர்தல் பிரச்சார பொறுப்பை ஐபேக் நிறுவனம் ஏற்றுக் கொண்டபோது, ரொம்ப பிரபலமாக பேசப்பட்டது ஐபேக் நிறுவனம் வந்துவிட்டது இனி அடுத்து நம்ம ஆட்சிதான் என்று அந்த கட்சியினர் ஆனந்தமாக இருந்தார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே அதன் சாயம் வெளுத்து விட்டது.

ஆங்காங்கே, சர்வே என்கின்ற பெயரில் கருத்து கணிப்பை நடத்திய அந்த நிறுவனம் இதனை முன்னிட்டு செய்த அத்துமீறல்கள் அநேகம் இருக்கின்றன. என்று கொதிக்கிறார்கள், திமுக நிர்வாகிகள்.

அனைத்து பகுதிகளிலும்’ இருக்கின்ற பெரிய ஆட்களை தொடர்பு கொண்ட அந்த நிறுவனம் உங்கள் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் உங்களுடைய பெயரையும் பரிந்துரை செய்து இருக்கின்றோம்.

என்று மீன் பிடிப்பதற்கு தூண்டில் போடுவது போல சில வேலைகளை செய்தது, இந்த விஷயம் தலைமைக்கு தெரியவந்ததால், இந்த விவகாரம் பற்றி கட்சியின் தலைமை அந்த நிறுவனத்திடம் விசாரித்தபோது, எங்கள் பெயரை யாரோ ஒருவர் தவறாக பயன்படுத்தி விட்டார்கள், என்று சொல்லி சமாளித்து விட்டார்கள்.

அதன் பிறகு இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கை, மற்றும் இணையதளம் வழியாக மாநாடு, இணையதளம் வழியாக பிரச்சார பொதுக்கூட்டம், என்று துரிதமான நடவடிக்கையால் அந்த கட்சி நிர்வாகிகள் இடையே அனல் பறந்து வருகின்றது.

எப்போது ஐபேக் நிறுவனம் எப்போது இங்கே வந்ததோ அதிலிருந்தே, எங்களுக்கு செலவும், வேலை பளுவும், அதிகமாகிவிட்டது என்று தெரிவிக்கிறார்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்.

கொரோனா நிவாரண உதவிகளில் ஆரம்பித்து, இப்போது நடந்து வரும் இணையதள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், வரை அனைத்துமே அந்த நிறுவனத்தின் திட்டம்தான்.

எங்கள் கட்சியினர் மட்டுமே பங்கு பெறும் இந்த நிகழ்ச்சிகளுக்காக ,லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து இருக்கின்றோம்.

வழக்கம்போல ,கட்சியின் தலைமை எதிலும் எங்களுக்கு பங்கு தருவதில்லை.

இதிலே இதைச் செய், அதைச் செய், என்று அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகாரம் வேறு செய்கிறார்கள், என்று கொதிக்கிறார் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி.

மக்கள் பங்கேற்காத இந்த நிகழ்ச்சிகளால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது அதேசமயம் எதிர்த்தரப்பில் ஆளும் கட்சியான அதிமுகவில் அமைதியாகவும் அட்டகாசமாக தேர்தல் வேலைகளை செய்ய தொடங்கி விட்டார்கள்.

ஆனாலும் எங்களுடைய பக்கமோ, டேட்டாக்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, எதை எதையோ சொல்லிக் கொண்டு தலைமையை ஏமாற்றும் வேலை தான் நடக்கின்றது இப்படியே போனால் சிக்கல்தான் என்று புலம்புகின்றார் அவர்.

திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபெக் நிறுவனம் மீது திமுகவின் முக்கிய மூத்த நிர்வாகிகள் அனேக கடுப்பில் இருக்கும் விவகாரம் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு கூட தெரிய வந்ததால், அந்த கட்சிக்குள் ஒருவித பதற்றமும், கலக்கமும், ஏற்பட்டிருக்கின்றது.