News4 Tamil
News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today

ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம்

0

ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம்

திமுகவிற்கும் ரவுடியிசம்,அட்டூழியம் செய்வதற்கும் பல வருடங்கள் தொடரும் உறவு போல மாதா மாதம் ஏதாவது ஒரு அதிரடி காட்டி பொது மக்களிடம் அசிங்கபட்டு நிற்பதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது.அந்த வகையில் சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வயதான தம்பதியினரை தாக்கி பொது மக்களிடம் சிக்கியுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த தசரதன், திமுகவில் 32 வது வட்ட துணை செயலாளாராக பதவி வகித்து வருகிறார். இதன் மூலம் அவர் வசிக்கும் பகுதியில் இவர் பவர்ஃபுல் அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது இந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்ற அரசியல் நிர்வாகிகள்,அதிகாரிகளை மிரட்டியும், தொழில் அதிபர்களை மிரட்டியும் வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரெட்டை ஏரி லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலையில் ஸ்ரீவாரி என்ற சூப்பர் மார்கெட் புதிதாக போன மாசம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆயுத பூஜை போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆயுத பூஜை அன்று செம்ம போதையில் இருந்த தசரதன் மார்க்கெட்டுக்குள் போயிருக்கிறார்.

அதனையடுத்து அங்கே கடை வைத்திருந்தவர்களிடம் வலிய சண்டைக்கு போனார் என்றும் கூறப்படுகிறது. “எப்படி நீ கடையை திறந்தே.. என்னை கேக்காம எப்படி கடையை திறந்தேன்னு கேட்டதாகவும்.. எனக்கு தர வேண்டியதை முதல்ல கொடு” என்று தகராறில் ஈடுபட்டதாகவும் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அப்பொழுது அந்த கடையின் அருகே வசித்து வந்த முதியவர் முத்துவும், அவரது மனைவியும் இவரது இந்த அட்டூழியத்தை தடுக்க முயன்றுள்ளனர்.

இதை கண்டதும் அந்த கடை பகுதியில் வசித்து வரும் மேலும் ஒரு வயதான தம்பதி, தசரதனை சமாதானம் செய்ய போயிருக்கிறார்கள். ஆனால்,காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு அவர்களை பச்சை பச்சையான வார்த்தைகளால் தசரதன் திட்டியிருக்குறார். ஒரு கட்டத்தில் அவர்களை காலாலேயே எட்டி உதைத்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள். இதை சம்பந்தபட்ட அந்த பெரியவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

DMK Person Attacks Elder Peoples in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today
DMK Person Attacks Elder Peoples in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

அதனால் அவர் சத்தமாக கத்தவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து திமுக பிரமுகர் தசரதனை மடக்கி பிடித்தனர். அப்போதும், ஒரு நபர் தசரதனை இழுத்து பிடித்து நிற்க வைத்து சமாதானம் செய்தார். ஆனாலும் தசரதன் அடங்கவில்லை, “மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல.. என்னை ஏன் எல்லாரும் அடிக்க வர்றாங்க” என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார். இறுதியில், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் திமுக பிரமுகர் தசரதன் மீது புகார் தந்தனர்.

Related Posts
1 of 83

இப்படித்தான், இதற்கு முன் மஜாஜ் சென்டரில் பெண்ணை தாக்குவது, ஓசி பிரியாணி கேட்டு பிரியாணி கடையை அடித்து உடைப்பது,எதிர்த்து கேட்ட கடை காரரின் மூக்கை உடைத்தது,சொந்த கட்சி பெண் நிர்வாகியின் இடுப்பை கிள்ளியது என்று திமுகவினர் வன்முறைகள் அதிகமாகி கொண்டே வந்தது. இந்நிலையில் போன மாதம், முத்துவேல் என்பவர் கடன் வாங்கி தருவதாக கூறி 100 கோடி ஏமாற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதே போல 2 நாளைக்கு முன்பு, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்எஸ்.பாண்டியன் என்பவர் போக்சோவில் கைதானார்.

இப்படி தொடர்ச்சியான அராஜகம் மற்றும் அட்டூழியங்களை திமுக பிரமுகர்கள் செய்து வருவது அக்கட்சி தலைமைக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்த தசரதன் அந்த பெரியவரை எட்டி உதைத்து தாக்கும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கட்சி தலைமை இதில் உடனடியாக தலையிட்டு, பெயரை கெடுக்கும் விதத்தில் யார் இப்படி அராஜகம் மற்றும் அட்டூழியங்கள் செய்தாலும் அவர்களை களையெடுக்க வேண்டும்.அதுவே அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று தரும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

error: Content is protected !!
WhatsApp chat