திமுக எம்.பி நடத்திய குடிநீர் ஆலைக்கு சீல்! சட்டவிரோதமாக செயல்பட்டதால் கலெக்டர் அதிரடி..!!

0
72

திமுக எம்.பி நடத்திய குடிநீர் ஆலைக்கு சீல்! சட்டவிரோதமாக செயல்பட்டதால் கலெக்டர் அதிரடி..!!

நிலத்தடி நீரை எடுப்பதற்காக சட்டப்படி உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்கமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உரிமம் வாங்காத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத குடிநீர் ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், குடிநீர் ஆலை சம்பந்தமான கோர்ட்டின் உத்தரவிற்கு உடனடியாக செயல்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் ஆலைகளை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொதுப் பணித்துறையின் நிலத்தடி நீர்மட்ட கோட்டப்பிரிவு அதிகாரிகள் ஒட்டுமொத்த மாவட்ட குடிநீர் ஆலைகளின் உரிமம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே சட்டப்படி உரிமம் வாங்கியிருப்பதாவும், 37 குடிநீர் ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், திமுக எம்.பி கதிர்ஆனந்த் சட்டவிரோதமாக நடத்தி வந்த குடிநீர் ஆலைக்கும் சேர்த்து சீல் வைக்கப்பட்டது. முதலில் 29 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது பின்னர், மீதமுள்ள 7 குடிநீர் ஆலைகளுக்கும் வருவாய்மதுறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிமம் பெறாத அனைத்து குடிநீர் ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran