திமுகவில் அதிகரிக்கும் தீண்டாமை.! திமுக எம்எல்ஏ- வை கண்டித்து தலித் அமைப்புகள் போராட்டம்

0
111

கடந்த சி தினங்களுக்கு முன்பு பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட ஆம்பூர் எம்எல்ஏ சென்றபோது நடந்த சம்பவம் தொடர் சர்ச்சையாகி வருகிறது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ வில்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள சேதமடைந்த அணையை பார்வையிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றார். அதிக மழை பெய்த காரணத்தால் அவர் சென்ற பாதை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு நடந்து சென்றார்.

 

ஆனால், அவருடன் சென்ற திமுகவைச் சேர்ந்த வெங்கட சமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் என்பவர், எம்எல்ஏ கழட்டிவிட்ட செருப்பை தூக்கிச் சென்றார். இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவியது. இதற்கு முன்பு திமுக கட்சியை சேர்ந்த ஆர்எஸ் பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு திமுக நிர்வாகி, எம்எல்ஏ-வின் செருப்பை கையில் எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையாகி வருகிறது. தலித் நிர்வாகியை செருப்பு தூக்கிவரச் சொல்வதா.? என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. சகதி, முட்கள் அதிகம் இருந்த காரணத்தால் எம்எல்ஏ செருப்பை கழட்டி வைத்துவிட்டுதான் நடந்து வந்தார். நான்தான் செருப்பை தூக்கி வந்தேன் என்றார். நான் தலித் என்பதால் என்னை பகடைக்காயாக்க வேண்டாம் என்றும் சங்கர் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தன் கால் செருப்பை தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தூக்கிவரச் செய்த ஆம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ வில்வநாதனை கண்டித்து திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் ஜாதிவெறியை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபகாலமாக திமுகவில் தீண்டாமை அதிகரித்து வருவதை எதிர்க்கும் இந்த போராட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது.

author avatar
Jayachandiran