திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

0
59

சூரியன் உதிப்பது முதல் அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெரு தெருவாக உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். எங்களுடைய தளபதி ஸ்டாலின் அவர்களை பார்த்து வெளியே வந்து பாருங்கள், விவரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருக்கின்ற அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கின்றது. புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வரவேற்பதாக ஊடகங்களில் செய்தி பரவியது. தாம்பரத்தில் ஒரே நாளில் 30 சென்டிமீட்டர் மழை ஏரிகளையும் நிறைந்த உபரிநீர் களாலும் பாதிக்கப்பட்டு பரிதவித்துக் கொண்டிருந்த செம்மஞ்சேரி சுனாமி நகர் பெருமக்களை ஒட்டியம்பாக்கம் ஜவஹர் நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த மக்கள் முதல்வர் நம்முடைய குறைகளை தீர்ப்பதற்காக தான் வருகின்றார் என்று காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம் என்று தெரிவித்திருக்கின்றார்.

ஆனாலும் ஏதோ வெள்ளப்பெருக்குகளை பார்வையிடுவதற்காக செல்கின்றேன் என்று தெரிவித்து கொண்டு எப்போதுமே நீர் நிலைகளாக இருக்கின்றார் துறைபாக்கம் ஒக்கியம்மடுகு முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளை மட்டும் பார்வையிட்டு விட்டு தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தெரிவித்துக்கொள்கின்றார் சூரியன் உதிப்பதில் ஆரம்பித்து அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெருக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எனவே அவர்களை பார்த்து வீட்டை வெளியே வந்து பாருங்கள் என்று விவரம் இல்லாமல் பேசுகின்றார் முதல்வர் என்று தெரிவித்திருக்கின்றார் சுப்பிரமணியம்.

ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக, சென்னை மாநகராட்சியில் வணக்கத்திற்குரிய மேயராக, ,தமிழகத்தின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது உள்ளாட்சித் துறையின் அமைச்சராக, தமிழக துணை முதல்வராக, இருந்தபோதும் கூட அல்லது இப்போது கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மாண்புமிகு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக, தற்போது இருந்து கொண்டிருக்கும் போதும் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மக்கள் வாழும் பகுதிக்கு ஓடோடி சென்று உதவி புரிகின்றார் என்று தெரிவித்தார் சுப்பிரமணியம்.

தனக்கு கொரோனா வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சேலத்திலேயே தங்கி இருந்ததையும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவர் கூட தன்னுடைய வீட்டு வாசலில் கொரோனா காலம் முடிவடையும் வரை வரக்கூடாது பொது மக்களோ அல்லது அமைச்சர்களோ அதிகாரிகளோ வரவேண்டாம் என விளம்பரம் செய்துவிட்டு இருந்த கொடுமையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து எகத்தாளமாக பேசுகின்றார் முதல்வர்.

ஆனால் ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராக உள்துறை அமைச்சராக தமிழகத்தில் துணை முதல்வராக இருந்தபோது செய்த பணிகள் காரணமாக தற்போது சென்னையில் இருக்கின்ற மழைநீர் வடிகால் வரும் அளவு 2071 கிலோ மீட்டர் அளவு உயர்த்தப்பட்டு இருக்கின்றது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தரையில் தவழ்ந்து வந்து பதவிக்கு வந்த பழனிச்சாமி இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை எங்கள் தலைவர் அடிக்கடி சொல்வதை போல கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதை பழனிச்சாமி அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.