வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்

0
66

நெல்லை : நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ய முயன்றதாக எழுந்த தகவலால் திமுக எம்எல்ஏவை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.

நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான அதிமுக, திமுக கடும் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இரு கட்சியினரும் போட்டி போட்டு கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இந் நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்ற பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டில் பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணக்குமார், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் திரண்டனர். வீட்டில் சரவணக்குமார் எம்எல்ஏ உள்பட சிலர் இருந்தனர். அப்போது சிலர் பணம் கொடுத்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த அரியகுளம் பகுதி மக்கள் பணப்பட்டுவாடா செய்யும் அம்பலத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  நீங்கள் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணக்குமார் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அவர்களை அந்த வீட்டிற்குள் வைத்து பூட்டினர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை திறந்து அனைவரையும் வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K