கூட்டணியை விட்டு வெளியேறும் முக்கிய கட்சி? அவசர ஆலோசனையில் ஸ்டாலின்!

0
99

தமிழ்நாட்டிலே சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எல்லா அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் நேர்காணல் என்று பரபரப்பாக காணப்படுகின்றன.

இதற்கிடையே திமுக கூட்டணியில் 3 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதர கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் இருந்துவருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ,அதேபோல மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி போன்ற கட்சிகளுடன் இதுவரையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டவில்லை. இதன் காரணமாக, கூட்டணி பிரிந்து மூன்றாவது அணி உதயம் ஆகிவிடுமோ என்ற கேள்வி ஸ்டாலின் மனதில் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 9 மணி அளவில் காணொளி மூலமாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கான அறிவிப்பை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் அந்த கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதேபோல முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் பங்கேற்க இருக்கிறார்கள். வரும் 7ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வரும் 11ஆம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இதுவரையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது இழுபறியாகவே இருந்து வருகிறது.

அப்படிப் பார்த்தோமானால் வரும் 11ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு என்பது திமுகவில் அனைத்து விதமான சிக்கல்களையும் தீர்த்து முடிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியோ அல்லது மற்ற கட்சியோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அது நிச்சயமாக திமுகவிற்கு பாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் அப்படியிருக்கையில் அப்படி ஒரு நிலைமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழிவகை செய்ய மாட்டார் என்று சொல்கிறார்கள்.

ஆகவே தற்சமயம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் தொகுதியை திமுக கொடுக்குமா அல்லது திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டு மற்ற கட்சிகள் இறங்கி வருமா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.