கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

0
69

மக்கள் நீதி மையத்தை திமுக தன்னுடைய கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கின்ற நிலையில், அடுத்ததாக தொகுதி பங்கீடு செய்வது தான் முக்கியமானது. இந்த நிலையில் வாக்கு வங்கி மற்றும் பிரச்சார பலம் கொண்ட கட்சிகளை தன் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது திமுக.

மக்கள் நீதி மையம் தேமுதிக இன்னும் பிற சிறிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் திமுக மக்கள் நீதி மையத்தை எப்படியேனும் கூட்டணிக்குள் இழுத்து வர முயற்சி செய்வதாக தெரிகின்றது.

இந்த நிலையில் , திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமலஹாசனை சந்தித்து பேசி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சமயத்தில் மக்கள் நீதி மையம் 40 தொகுதிகள் கேட்ட து எனவும், ஆனால் அவ்வளவு தருவது சாத்தியமில்லை என 21 தொகுதிகள் தருவதற்கு திமுக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

ஆனாலும், கமல்ஹாசன் போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாகின்றது. என்ற காரணத்தால், எப்படியாவது கூடுதல் தொகுதிகளை கொடுத்தாவது மக்கள் நீதி மையத்தை தன்னுடைய கூட்டணியுடன் இணைத்து விட வேண்டும் என்று முயற்சிகளை திமுக மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இப்போதெல்லாம் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் பொழுது திமுகவை விமர்சனம் செய்யாமல் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.