DMK Leaders Attack Tea Shop and Press Reporter
DMK Leaders Attack Tea Shop and Press Reporter

திமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து அசிங்கப்படும் திமுக

வைகோ தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்னே முற்றுகை போராட்டம் நடைபெற்ற போது தேநீர் கடையில் திமுகவினர் ஓசியில் டீ தரவில்லை என்பதற்காக கடையை அடித்து அராஜகம்.

கடந்த சில மாதங்களில் திமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் கட்சியின் பெயர் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.குறிப்பாக சமூக வலைதளங்களில் #ஓசிபிரியாணிதிமுக, #ஓசிபஜ்ஜிதிமுக, #ஓசிடீதிமுக என கிண்டலடித்து தேசிய அளவில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு தொண்டர்களால் பிரச்சனைகள் உருவாகுவதும் அதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்னே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் எதிர்கட்சியான திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்ரமணியம் போன்றோரும், விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள் மேலும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

திமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து அசிங்கப்படும் திமுக-News4 Tamil
DMK Leaders Attack Tea Shop and Press Reporter-News4 Tamil

இந்த போராட்டம் நடந்த போது தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு அருகில் இருந்த டீக்கடையில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஓசியில் சாப்பிட கடைக்காரர் பொருள் கொடுக்காததால் தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு அவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு கைகலப்பில் ஈடுபடும் இந்த சம்பவத்தை ஆங்கில செய்தி தொலைகாட்சியின் நிருபர் பிரமோத் மாதவ் வீடியோ எடுக்க முயன்றிருக்கிறார்.இதை கவனித்த தி.மு.க-வின் சுரேஷ் பாபு பத்திரிக்கையாளர் பிரமோத் மாதவை மிரட்டி கொண்டே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் ஓசி டீ கொடுக்காததால் தான் திமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.இது #ஓசிடீதிமுக என்ற ஹாஸ் டேக்கில் டிரெண்டிங் ஆகி வந்தது.

கடந்த சில மாதங்களிலே பஜ்ஜி கடை, பியூட்டி பார்லர், பிரியாணி கடை, பரோட்டா கடை என தொடர் தாக்குதலில் திமுகவினர் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது டீக்கடையில் தனது அடாவடி தனத்தை காட்டியிருக்கின்றனர் தி.மு.க-வினர்.ஏற்கனவே தமிழக அரசியலில் பல சாதகமான சூழ்நிலைகள் அமைந்த போதும் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு சரியாக இல்லாததை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில் திமுக தொண்டர்களின் இது போன்ற ரௌடி தந்தால் கட்சிக்கு கெட்ட பெயர் வருவதுடன் ஸ்டாலினின் ஆளுமை திறனில் உள்ள குறைபாடும் வெளிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை தாக்கிய பிரச்சனையில் தற்காலிகமாக நீக்கிய திமுக நிர்வாகியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கட்சியில் மறுபடியும் சேர்த்து கொண்டதாக அறிவித்தனர்.இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் எழுப்பிய நிலையில் மறுபடியும் அது போன்ற செயல் நடைபெறுவது தவறு செய்யும் திமுக தொண்டர்களின் மீது கட்சி சரியான நடவடிக்கை எடுக்காததையே காட்டுகிறது.

திமுக தொண்டர்களின் முந்தைய அடாவடி செயல்கள் குறித்து தெரிந்து கொள்ள பின்வரும் தொடர்பை பாருங்கள்.

தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#DMK #Leaders #Attack #Tea #Shop #Press #Reporter