அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

0
128

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் வகையில் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக அமைக்கபட்ட அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் மக்கள் படை என்ற அமைப்புகளை மாவட்ட வாரியாக சந்தித்து கலந்தாலோசித்து வருகிறார்.

இந்த அமைப்புகள் மூலம் வட தமிழகத்தில் பாமக பலமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து அதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அடுத்த கட்ட நிகழ்வாக தான் மாவட்ட வாரியாக மக்களை சந்திக்க அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் திமுக தலைவர் கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்ட “நமக்கு நாமே” நடைபயணத்தின் காப்பி என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கழக உடன்பிறப்புகள் பரப்பி வருகின்றனர்.மேலும் அவர்கள் இதை பிரபல தனியார் செய்தி சேனல்களில் செய்தியாளர்கள் பெயரில் ஊடுருவியுள்ள திமுக உடன்பிறப்புகள் மூலம் செய்தியாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்று கடந்த கால அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு புரியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மாற்றம் முன்னேற்றம் என்ற கோஷத்தை வைத்து வண்டலூரில் மிக பிரமாண்டமான ஹை டெக் பிரச்சாரத்தை நடத்தி தமிழக அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இத்துடன் நிற்காமல் தொடர்ந்து காவிரி உபரி நீர் திட்டம்,வைகையை காப்போம், பாலாறை காப்போம், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பிரச்சினை குறித்து அப்பகுதி மக்களை சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் நீர் மேலாண்மை பற்றி பேச ஆரம்ப புள்ளியை வைத்தவர் அன்புமணி ராமதாஸ் தான்.

காலம் காலமாக மேடை போட்டு மைக் பிடித்து பேசி கொண்டிருந்த ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த புதிய அரசியல் செயல்பாடு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் வேறு வழியில்லாமல் நிலைமையை சமாளிக்க நானும் மக்களை சந்திக்கிறேன் என்ற பெயரில் தான் திமுக சார்பாக ஸ்டாலின் மேற்கொண்ட “நமக்கு நாமே” நாடகம் அரங்கேற்றப்பட்டது.

மக்களை சந்திக்கிறேன் என்ற பெயரில் “நமக்கு நாமே” நடைபயணத்தில் திமுக தலைவர் செய்த காமெடிகள் இன்னும் தமிழக மக்கள் மனதில் நினைவில் உள்ளன. குறிப்பாக கரும்பு தோட்டத்தில் தலைவர் நடக்க சிமெண்ட் சாலையை அமைத்துத் கொடுத்தது எல்லாம் திமுக உடன்பிறப்புகள் செய்த உச்ச கட்ட காமெடியாக தான் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிகழ்வை அன்புமணி ராமதாஸ் காப்பி அடிப்பதாக வதந்தியை கிளப்பி விடுவதெல்லம் வெற லெவல்.

மத்திய அமைச்சராக அன்புமணி ராமதாஸ் செயல்படுத்திய 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை திமுகவின் சாதனையாக சட்டமன்றத்தில் புளுகிய தலைவர் ஸ்டாலினின் தொண்டர்களும் அவ்வழியே என்பதை நிரூபித்து விட்டார்கள். எது எப்படியோ இந்த முறை அன்புமணி ராமதாஸ் எடுக்கும் முயற்சிகளை விரைவில் ஸ்டாலின் நல்ல முறையில் காப்பி அடிப்பார் என்று நம்புவோம்.

author avatar
Ammasi Manickam