திமுக என்பது நோய்களின் பிறப்பிடம்! முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!

0
89

சென்னை மாநகரம் சுமார் 4️ தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, சென்னை நகரமே தத்தளித்து வருகின்றது பல இடங்களிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் சென்னைவாசிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்தவர்கள், உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

அதனை எடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயக்குமார் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என தெரிவித்தார்கள், ஆனால் சீர்கேடு சென்னை யாகத்தான் வைத்திருக்கிறார்கள். கோட்டை மாட்டிக்கொண்டு சிவப்பு ஜீப்பில் வந்து ஆய்வு செய்கின்றார் முதலமைச்சர். யாராவது ஏதாவது தெரிவித்தால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே நடந்து செல்கின்றார் இந்த ஆய்வின் காரணமாக எந்தவிதமான பயனும் இல்லை திமுக அரசு ஆமை போல செயல்படுகிறது என கூறியிருக்கிறார்.

1350 கோடி ரூபாய்க்கு நாங்கள் தூர்வாருதல் மழைநீர் வடிகால் பணிகள் முன்னெடுத்தோம், ஆனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த அரசு ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது அதிகாரிகளை முடுக்கி விட்டால் தான் சென்னையை காப்பாற்ற இயலும். ஜேம்ஸ் பாண்ட் போலவும், சங்கர்லால் போலவும், கோட் சூட் போட்டுக்கொண்டு ஆய்வு செய்வதால் எந்தவிதமான நன்மையும் ஏற்பட்டு விடப்போவதில்லை என கூறியிருக்கிறார்.

எங்களுடைய ஆட்சிக்காலத்தில் 1800 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை சுத்தம் செய்தோம், ஆனால் ஸ்டாலின் 600 கிலோமீட்டர் நாங்கள் தூய்மை செய்து இருக்கிறோம் என தெரிவிக்கிறார். அதனடிப்படையில் 1200 கிலோமீட்டர் அளவிற்கு தூய்மை செய்யவில்லை என்று அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதான் அரசின் இயலாமையை காட்டுகிறது, நாங்கள் தூய்மை செய்து வைத்திருந்ததால் தான் டிசம்பர் மாதத்தில் மழை பெய்த சமயத்தில் நீர் தேங்க வில்லை என தெரிவித்தார் ஜெயகுமார்.

எடப்பாடி பழனிச்சாமி போய் உரைக்கிறார் என முதலமைச்சர் தெறிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் தெரிவித்த ஜெயக்குமார், இவர்கள்தான் பொய் வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், பொய்களின் ஒட்டுமொத்த அவதாரமாக உள்ளவர்கள் எங்களை பொய் சொல்கிறோம் என சொன்னால் நாட்டில் யாரும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஒரு முதலமைச்சர் ஆய்வுக்கு வரும் போது பொதுமக்களின் கருத்து என்ன என கேட்க வேண்டும் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் ஒரு பெண்மணி வந்து உரையாற்றுகிறார் ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பதை கூட கேட்டுக் கொள்ளாமல் இவர் போய்க் கொண்டே இருக்கின்றார், இதனால் என்ன பயன் என விமர்சனம் செய்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.