அது கட்சியே கிடையாது! திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி!

0
65

திமுக என்பது ஒரு கட்சியை கிடையாது அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதற்கு ஸ்டாலின் சேர்மேன் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு கட்சியானது தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று பொதுமக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் அருள்மிகு கந்தசாமி ஆலயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதன் பிறகு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்றோர் வழியிலே தமிழகத்தில் நடைபெறக்கூடிய அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

நாட்டிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வரும் ஒரே மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஸ்டாலினின் மகன் உதயநிதி காவல்துறை அதிகாரியை மிரட்டி பார்க்கின்றார் இந்த நிலையில் ,திமுக ஆட்சியில் அமர்ந்தால் மக்கள் நிம்மதியாக எப்படி வாழ்வார்கள்? அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் ஒரு அராஜக கட்சி ஆட்சிக்கு வரும் ஆனால் என்ன நடக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள் என்று தெரிவித்தார்.

அதோடு நான் ஒரு விவசாயி என்று தெரிவித்தால் அதனை ஸ்டாலின் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அது மட்டும் கிடையாது தமிழ் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதோடு வளர்ச்சியையும் மனதில் வைத்து டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து மனு கொடுத்து இருக்கின்றேன் ஆனால் தன்னுடைய குடும்பத்திற்காக பதவி வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே டெல்லிக்குச்செல்வார் கருணாநிதி இதுதான் கடந்த கால வரலாறு என்று தெரிவித்திருக்கிறார்.