கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

0
98

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன் சொந்த கட்சியான திமுகவை விமர்சித்து பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் அவர் பேசும் போது பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசினார். இவரின் பேச்சை கண்டு அங்கிருந்த திமுக ஒன்றிய குழு தலைவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் பேசிய அவர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மதிப்பதே இல்லை எனவும், மரியாதை குறைவாகவும் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய மனைவியே உங்கள் ஆட்சியில் இப்படி தான் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவீர்களா என கேட்டதாகவும், இதனால் முதலமைச்சருக்கு தான் அவப்பெயர் ஏற்படும் எனவும் தெரிவித்தாகவும் கவுன்சிலர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும், திருபுவனம் ஒன்றிய டிப்போ பேருந்து ஓட்டுநர்கள்,அரசு அறிவித்துள்ள இந்த இலவச பேருந்துக்காக காத்திருந்து அதில் பெண்கள் ஏற முயற்சிக்கும் போது பேருந்தை தள்ளி நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதுபோன்ற செயல் பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும் தனக்கும் மன உளைச்சலாக உள்ளது எனவும் திமுக ஆட்சியை வருத்தத்துடன் அவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் சொந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் திமுகவின் திட்டத்தை விமர்சித்து பேசியுள்ளதை சமூக வலைத்தளங்களில் வடிவேல் காமெடியான கரடியே காரி துப்பியதா என்பதை தொடர்பு படுத்தி விமர்சித்து வருகின்றனர்.