ஏய் நீ ஏன் என் வார்டுக்கு வந்த? போட்டோ வுக்காக அடிதடியில் இறங்கிய திமுக கவுன்சிலர்கள்!

0
63

திமுகவைப் பொறுத்தவரையில் அது எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலும் கூட தமிழகத்தில் ஆங்காங்கே கலவரங்களை ஏற்படுத்துவது, ஏழை எளிய பொதுமக்களிடம் மிரட்டல் உள்ளிட்ட பணிகளில் இறங்கியிருந்தது .

அதாவது டீக்கடைக்கு சென்று இலவசமாக டீ வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது, பிரியாணி கடைகளுக்கு சென்று இலவசமாக பிரியாணி வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது ,உள்ளிட்ட காரியங்களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இறங்கி வந்தது. இதன் காரணமாக, அப்போது தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

இந்த நிலையில், சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ஏற்கனவே அந்த காட்சியை நினைத்து பயந்து கொண்டிருந்த தமிழக மக்கள் தற்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது அவ்வளவு அட்டூழியம் செய்த திமுக ஆளுங்கட்சியாக அதிகாரத்திற்கு வந்த பிறகு என்ன செய்யப் போகிறதோ? என்று கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதேபோல திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றைய தினமே சென்னையில் அம்மா உணவக பெயர் பலகையை சேதப்படுத்தி அந்த கடையை சூறையாடி தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியது திமுக.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது இவ்வாறான நிலையில் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியிலிருக்கின்ற ஆரம்ப சுகாதார மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பங்கேற்று சொட்டு மருந்துகளை ஆரம்பித்து வைத்தார்.

அப்போது மிளகுபாறையை சார்ந்த 54 ஆவது வார்டு திமுக கவுன்சிலரான புஷ்பராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 வது வார்டு திமுக கவுன்சிலரான ராமதாசும் ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்சியருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்.

இதன்காரணமாக, ஆட்சியர் நின்றுகொண்டிருந்தபோது என்னுடைய வார்டுக்கு எவ்வாறு வரலாம் என்று புஷ்பராஜ் கேட்டபோது பதில் தெரிவித்துவிட்டு ராமதாஸ் அங்கிருந்து நகர்ந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலும் மற்றும் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதில் திமுக கவுன்சிலர் ராமதாஸ் முந்திக் கொண்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் உண்டானது.

ஆரம்ப சுகாதார மையம் முன்பு திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குமிடையே தகராறு உண்டானது. ஆரம்ப சுகாதார மையம் முன்பு திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாளர்களும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.