பொங்கல் பரிசு திட்டம் தேர்தல்! ஆணையத்தில் புகார் அளித்த திமுக!

0
74

பொங்கல் பரிசு தாக்கங்களை ஆளும் தரப்பினர் வினியோகம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இருக்கின்றது.

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் , ரூபாய் 2500 கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டமானது அமல்படுத்தப்படும் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது ஆனாலும் சேர்ந்த 23-ஆம் தேதியே முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே, பொங்கல் பரிசு நோக்கங்களை நியாய விலை கடை பணியாளர்கள் மூலமாகவே வழங்க வேண்டும் அப்படி செய்யாமல் இது தேர்தல் நேரம் என்பதால், அதிமுகவினர் மூலமாகவே அது விநியோகிக்கப்படும் இதை நிறுத்த வேண்டும் எனவும், ஸ்டாலின் வலியுறுத்தினார். இதுகுறித்த புகார் மனுவை தேர்தல் ஆணையத்திடம் திமுக நேற்று அளித்தது. தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் மனு அளித்த பின்னர் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

கொரோனா, மற்றும் நிவர் புயல் வந்தபோதெல்லாம் மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனாலும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இது ஏற்புடையது அல்ல.

அனைத்து தொகுதிகளிலும், ஆளும் கட்சியை சார்ந்த நபர்கள் அவர்களுடைய கட்சி நிதியிலிருந்து கொடுப்பதைப் போல டோக்கன்களை வழங்குகிறார்கள். வேலுமணி தொகுதியிலே அதிமுகவின் கொடியின் வண்ணத்தில் அவருடைய பெயர் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றது. ஜெயக்குமார் தொகுதியில் அவர் தேர்தலில் வாக்கு கேட்பதைப் போல புகைப்படத்துடன் விநியோகம் செய்யப்படுகின்றது .என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார் ஆர். எஸ்.பாரதி.

மக்களுடைய வரிப்பணத்தில் கொடுக்கப்படும் பொங்கல் பரிசு அதிமுகவின் கோடி அவர்களுடைய பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் அச்சடித்து அதிமுகவின் கட்சி நிதியை கொடுப்பதுபோல ஆளும் தரப்பினர் வினியோகம் செய்வது முறையற்ற செயலாகும். என்று குற்றம் சாட்டி இருக்கின்றார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றது. மனுவின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கின்றார்.