திமுகவின் சட்ட சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை

0
80

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் என்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவனைத் தொடர்ந்து சட்ட சபையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் என்னை புகழ்ந்து பேசினால் திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதையும் ஒரு அளவுடன் வைத்துக்கொள்ளுங்கள் நேற்றே இதுகுறித்து நான் உத்தரவிட்டுள்ளேன் நேரத்தின் அருமை கருதி மானிய கோரிக்கை விவாதத்தில் என்னைப்பற்றி உரையாற்றுவது தவிர்க்க வேண்டும். திமுக சட்டசபை உறுப்பினர் ஐயப்பன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார் ஸ்டாலின.

புகழ்ந்து பேச வேண்டாம் என்று தெரிவித்த பின் திமுக சட்டசபை உறுப்பினர் அய்யப்பன் புகழ்ந்து பேசியதால் திமுகவைச் சேர்ந்த அனைத்து சட்ட சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.