திமுக மற்றும் வி.சி.கவை கதறவிட்ட அந்த நான்கு நபர்கள்!

0
57
MK Stalin
MK Stalin

தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த இருக்கின்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், வாக்கு என்னும் மையங்களில் எதிர்க்கட்சியான திமுக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், நோய் தொற்று காரணமாக, வார இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது ஆனால் தேர்தல் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தேர்தல் நாளன்று இந்த ஊரடங்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதரபட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கல்லூரி வளாகத்தில் மூன்று பணி சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்காணித்து வருகிறார்கள்.மேலும் துணை ராணுவப் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கல்லூரியின் வளாகத்தில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் நுழைந்து இருக்கிறார்கள். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

காவல்துறையினரிடம் அனுமதி வாங்காமல் எதற்காக இந்த நான்கு பேரை வளாகத்திற்குள் அனுமதித்தார்கள் எங்களுக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. இது கள்ள ஓட்டு போடுவதற்கும் வாக்குப்பெட்டியை மாற்றுவதற்கும் வழிவகை செய்யும் என்றும்,இதில் ஏதோ சதி நடந்து கொண்டிருக்கிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் அங்கிருந்து கலைந்து சென்று இருக்கிறார்கள் இதனால் அந்த பகுதியில் கொஞ்சநேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.