தொடங்கியது சீட் பேரம்! காங்கிரஸ் கேட்ட அந்த தொகுதி திமுகவில் புதிய சர்ச்சை!

0
83

மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை கோவை கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரையாற்றினார் மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள் சஞ்சய் தத் ஸ்ரீ பிரசாத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உரையாற்றியபோது, நேருவுக்கு கடவுள், மதம், மீது நம்பிக்கை இல்லை. ஆனாலும் இந்த இரண்டின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த காந்தியடிகளின் சீடராகவே நேரு இருந்து வந்தார். அதுதான் ஜனநாயகம். பாஜகவின் கடவுள் பக்தி உண்மையானால், வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் அவர்கள் செல்ல வேண்டும் அப்படி சென்று விட்டால் நாங்களும் வருகிறோம்.

எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் சுயமரியாதை இருக்கின்ற ஒரு கட்சி காங்கிரஸ். தற்போது புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது எங்கள் கட்சி. மோடி அவர்களை வீழ்த்துவதற்கு மாவீரனான ராகுல் காந்தியால் மட்டுமே முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேச மாட்டோம் என்று ஏற்கனவே தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்த நிலையில் கே எஸ் அழகிரி அவர்கள் நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம் குறைவாகவும் கேட்க மாட்டோம் எங்களுக்கு தேவையானதை மட்டுமே பெற்றுக் கொள்வோம் அதுதான் எங்களுடைய கொள்கை என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கே எஸ் அழகிரி உள்பட பல தலைவர்கள் ஏர் கலப்பையுடன் பேரணியாக செல்வதற்கு முயற்சி செய்தார்கள். ஆனாலும் அனுமதியின்றி பேரணி நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் தடுத்து விட்டனர். இதன் காரணமாக, காவல்துறையினருக்கும் காங்கிரஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை அடுத்து அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.