திமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக

0
1876
DMK and Congress Expecting to Make Alliance with PMK-News4 Tamil Online Tamil News Portal
DMK and Congress Expecting to Make Alliance with PMK-News4 Tamil Online Tamil News Portal

திமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக

தேசிய அளவில் பாஜக பெற்று வந்த வெற்றியும்,காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளும் வரும் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகத்தை அனைத்து அரசியல் ஆர்வலர்களுக்கும் ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் திமுகவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடரலாமா?, ஆளும் பாஜகவுடன் இணையலாமா? அல்லது மூன்றாவது அணியை உருவாக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தது

இந்நிலையில் எக்காலத்திலும் திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட கூட்டணியை ஏற்று கொள்ளலாம் ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக கூறியிருந்தார்.

பாமகவின் இந்த நிலைப்பாடு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்தது மட்டுமில்லாமல்  மறுபடியும் காங்கிரஸ் பக்கம் நெருங்க வைத்தது. இந்நிலையில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி திமுகவிற்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தது. இனி காங்கிரஸ் உடன் தான் கூட்டணி என்று முடிவு செய்த ஸ்டாலின் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பெரும்பாலான தனது கூட்டணி கட்சிகளின் முன்னிலையில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணி கட்சிகளை கூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்து திமுக காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தார்.

தேசிய அளவில் வலிமையான கூட்டணிஅமைக்க முயற்சித்தாலும் தமிழகத்தில் அவரால் வலிமையான கூட்டணியை ஏற்படுத்த முடியவில்லை என்பதற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலும் சமீபத்தில் நடந்து முடிந்த RKநகர் இடைதேர்தல் தோல்விகளுமே உதாரணம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்ற பாமகவின் வாக்குகள் தான் திமுகவின் வெற்றியை பல இடங்களில் பாதித்தது என்பதை நன்றாக உணர்ந்த திமுகவினர் பாமகவின் வாக்குகளை கவர பல விதங்களில் முயற்சி செய்தும் பயனளிக்காத நிலையில் தற்போது எப்படியாவது பாமக வை திமுக காங்கிரஸ் கூட்டணியில்இணைத்து விட வேண்டும் என்று ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் நிலையான வாக்கு வங்கியை கொண்ட பாமகவை தங்கள் அணிக்குகொண்டு வந்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார்கள். அதன் விளைவாக பாமகவும் அந்த சூழ்நிலையில் தனக்கு சாதகமான அணியை தேர்ந்தெடுத்து வெற்றியும் பெற்றுள்ளது.அரசியல் வெற்றிக்காக மாறி மாறி கூட்டணி வைத்திருந்தாலும் பாமக தன்னுடைய கொள்கையில் எந்த மாற்றமும் செய்து கொள்ளாமல் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் ஆளுங்கட்சியின் தவறான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு போராட்டங்கள்,கண்டன அறிக்கைகள் என ஒரு சிறந்த எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் பாமக பெரிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது மக்கள் மத்தியில் ஏற்று கொள்ளப்படவில்லை. இதை உணர்ந்த பாமக கட்சி தலைமையும் மாறி மாறி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தவறு என்றும் அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று அறிவித்து விட்டு கடந்த தேர்தலில் தனித்து நின்றார்கள். அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை களம் கண்ட பாமக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை அடுத்து தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக வாக்குகளை பெற்றது.

DMK and Congress Expecting to Make Alliance with PMK News4 Tamil Online Tamil News Website
DMK and Congress Expecting to Make Alliance with PMK-News4 Tamil Online Tamil News Website

தேர்தலுக்கு பின்னரும் நீர் மேலாண்மை, காவிரி உபரி நீர் திட்டம், மதுவிலக்கு, ஹைட்ரோகார்பன்எதிர்ப்பு என தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். கடந்த காலங்களை போலில்லாமல் படித்த இளைஞர்கள்அரசியலை சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் படித்தவரும் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சராக தனது நிர்வாக திறனால் பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியவருமான அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இதை உணர்ந்த திமுக தலைவர்கள் பழைய பகையை மறந்து வரும் தேர்தலிலாவது பாமகவை தங்களது கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. பாமக தனியாக நிற்பது எதிர்காலவளர்ச்சிக்கு உதவுமே தவிர உடனடி வெற்றியை கொடுப்பது சந்தேகமே. தமிழக அளவிலான சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றாலும் தேசிய அளவிலான நாடாளமன்ற  தேர்தலில் எதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பாமக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக இவ்வாறு கூட்டணிக்காக முயற்சி செய்தாலும் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்பு தான் பாமகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

author avatar
Parthipan K