திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
236
DMK alliance party candidate disqualified in action.. Election Commission sensational action? Important information released by former minister!!
#image_DMK alliance party candidate disqualified in action.. Election Commission sensational action? Important information released by former minister!! title

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதையொட்டி  தேர்தல் பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், அதிமுக மட்டும்  எந்த ஒரு நிலைப்பாடும் இல்லாமல் தடுமாறியே இருந்தது. ஏனென்றால் எடப்பாடி தரப்பாக தென்னரசு நிற்க வைப்பதாகவும், ஓபிஎஸ் தரப்பாக செந்தில் முருகனை நிற்க வைப்பதாகவும் போட்டி போட்டு வந்த நிலையில் இரட்டை இலை யாருக்கு என்று பெரும் சந்தேகம் இருந்தது.

பின்பு உச்ச நீதிமன்றம், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம் என கூறியவுடன் ஓபிஎஸ் பின் வாங்கியதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தென்னரசை வேட்பாளராக நியமித்து இரட்டை இலையை தனக்கு சாதகமாகி கொண்டார்.இதனையடுத்து அமமுகவும் இவர்களுக்கு வழி விட்டது. இந்நிலையில் இரட்டை இலை வாக்குகள் எதுவும் சிதறாமல் எடப்பாடிக்கு வரும் என்று பெருமளவில் எதிர்பார்ப்புகள் உள்ளது.

அந்தந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேலையில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ் பி வேலுமணி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். திமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல விதிகளை மீறி வருகிறது. அந்த வகையில் ஒரு தெருவிற்கு நான்கு பூத் என்ற வகையில் அமைத்து வாக்குகளை சேகரித்து வருகிறது. இதனையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பல இடங்களில் அவர்கள் அமைச்சர்களையே நிறுத்துகின்றனர்.

இது தேர்தலுக்கு மிகவும் அப்பாற்பட்டது. இவ்வாறான செயல்களுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாயின் கட்டாயம் திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக நிற்க வைத்துள்ள ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆனதே தவிர தற்பொழுது வரை கூறிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அதற்கு எடுத்துக்காட்டாக, மகளிருக்கு வழங்க உள்ள ஆயிரம் பணத்தை தற்பொழுது வரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. உங்களிடம் ஓட்டு கேட்க வரும் பொழுது இதனையெல்லாம் கேள்வியாக முன்வைக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல கட்டாயம் இந்த தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.