திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

0
118

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வேண்டுமென்றே சில கட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைத்தன்மையை மக்களிடம் எடுத்து சொல்லாமல், சிந்திக்க கூட விடாமல் அப்பாவி மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்ட களத்தில் இறக்கி விட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டத்தை நீக்கத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வந்தன. திமுகவின் எதிர்ப்பு குரல் என்பது தமிழகத்திற்கு சிறப்பு சட்டப்பிரிவை நீக்கயது போல் கொந்தளித்து தன்னை பாகிஸ்தான் ஊடகங்களே பாராட்டும் அளவிற்கு விளம்பரப்படுத்தி கொண்டது, அதேபோல் ஈழத்தமிழர்களை தேசிய குடியுரிமை சட்ட பிரச்சனையில் சிக்க வைத்து விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறது திமுக,. இதற்கு அதிமுக, பாமக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் பலத்த பதிலடியை கொடுத்து வருகின்றனர்,.

தற்போது நாடாளுமன்றத்தில் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதால் திமுக தன்னை விளம்பரத்துக்காகவே அடையாளப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது என்று தேசிய அளவில் உள்ள அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்,.

இந்த சூழ்நிலையில் பாஜக, கோபத்தின் உச்சத்திற்கே திமுகவின் செயல்பாடுகளால் சென்றுவிட்டது, இதன் விளைவாகவே இந்திய தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போதே முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை டெல்லிக்கு அழைத்து கதற வைக்க அறிவிக்கை அனுப்பி விட்டது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.

முரசொலி பஞ்சமி நில விவரத்தில் ஆவணங்களை காட்டாமல் வழக்கறிஞர்களை வைத்து வாதாடி சென்ற திமுக,. முரசொலி அறங்காவலரான மு.க.ஸ்டாலினை ஜனவரி மாதம் ஏழாம் தேதி டெல்லியில் பஞ்சமி நிலம் விவகாரம் தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய துணைத் தலைவர் L.முருகன் அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்,.

தனது கட்சி எம்.பி களை வைத்து போராடி கொண்டிருக்கும் திமுகவை கதற வைக்க அதன் தலைவரை டெல்லியில் வைத்து முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று பாஜக எண்ணுகிறது,. மேலும் 2ஜி வழக்கு விசாரணையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தான் கனிமொழியும் ஆ.ராசாவையும் வழக்கிலிருந்து விடுவித்தது,. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விரைவில் சூடு பிடிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் பற்றி நேற்று தன்னை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொந்தளித்து பேசியுள்ளதாகவும், மு.க.ஸ்டாலினை பல்வேறு விஷயங்களில் சிக்க வைக்கவும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.

தேசிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விளம்பரம் செய்து கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் கூடிய விரைவில் தேசிய அளவில் அவமானபடுத்த படுவார் என்று பாஜக ஆங்காங்கே திமுகவினரை வெறுப்பேற்றி வருகின்றனர்.

author avatar
Parthipan K