தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்

0
70

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளன. குறிப்பாக திராவிட கட்சிகளும், பாஜக காங்கிரஸ் போன்றவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2011 இல் எதிர்க்கட்சி அவையில் இருந்த தேமுதிக அதன்பின்பு வலுவிழந்து காணப்பட்டது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தனது முழு பலத்தையும் பிரயோகிக்க இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பார்த்திபனூரில் தேமுதிகவின் அலுவலக மேலாளரான செந்தில்குமார் என்பவரது திருமண விழாவில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளரான பிரேமலதா, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது,”வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி அதன் பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைக்க போகிறோமா என்பது பற்றி டிசம்பரில் அல்லது ஜனவரி பொங்கலன்று விஜயகாந்த் அறிவிப்பார்.

தமிழகம் முழுவதும் விஜயகாந்துடன் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். 2021 தேர்தல் தேமுதிகவிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். தற்போது அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்.

DMDk prepares for the polls in full swing Premalatha Vijayakand's reply on the alliance
DMDk prepares for the polls in full swing: Premalatha Vijayakand’s reply on the alliance

தற்போது ஆளுமை மிக்க தலைவர்கள் யாருமில்லை என்பதால் 2021 தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையினை நிரூபிக்க இயலாது. அந்தவகையில் தேமுதிகவும் தனது முழு பலத்தோடு தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

வருகிற சட்டமன்ற தேர்தல் மக்களுக்கான வளர்ச்சியை நோக்கி இருக்கும். அனைத்து கட்சிகளும் தற்போது கூட்டணிக்கு எங்களை அழைக்கின்றனர். ஆனால் தற்போது கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”

என பிரேமலதா விஜயகாந்த் அந்த திருமணவிழாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K