தேமுதிக தெரிவித்த சூசக தகவல்! திமுகவிற்கு கிரீன் சிக்னல்?

0
59

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில், தற்சமயம் பாமக,தேமுதிக, பாமக, மற்றும் பாஜக, ஆகிய கட்சிகள் தொடர்கின்றன. அதில் பாஜகவுடன் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக உறுதி செய்துவிட்ட நிலையில், தற்பொழுது வரை அதிமுகவின் கூட்டணியில் தான் இருந்து வருகின்றோம் என்று தேமுதிக தொடர்ச்சியாக தெரிவித்து வந்தாலும், ஜனவரி மாதத்திற்கு பின்னர் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக அறிவிப்போம் என்று தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையிலே, திமுகவுடன் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, என்று தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் அவர்களுடைய மகன் விஜய பிரபாகரன் தெரிவித்திருக்கின்றார். தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கேள்விக்கு பதில் தெரிவித்த விஜயபிரபாகரன், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது 40 தொகுதிகள் எதற்காக தேமுதிகவிற்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுகவும், திமுகவும், கேட்டால் அவர்களிடம் அதற்கான பதிலை தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.

எதிர்க் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா என்று என்னால் தெரிவிக்க இயலாது.ஆனாலும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலரும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலரும், கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களிடம் விஜயகாந்த் எடுப்பதுதான் இறுதியான முடிவு அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வேன்.

அதோடு’ அதிமுக, அல்லது, திமுக என்று எந்த கூட்டணியில் இருந்தாலும், யாரை நிறுத்துகிறார்களோ அவர்களை ஏற்று பணி செய்வோம். மூன்றாவதாக ஒரு அணியை அமைத்தால், அதற்கு நாங்களே தலைமை ஏற்போம். ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி, ஆகியோர் இருந்த காலத்திலேயே கட்சியை ஆரம்பித்து தன்னை நிரூபித்துக் காட்டியவர் விஜயகாந்த். எனவே மற்ற கட்சிகளின் கீழே கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று தெரிவித்தார் விஜய பிரபாகரன்.