திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறதா தேமுதிக

மத்தியில் பிரதமர் நரேந்தி ர மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் மற்றும் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட போவது உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து தேசிய கட்சிகளான பாஜகவும்,காங்கிரஸும் மாநிலக் கட்சிகளை தங்களுடன் இணைத்து தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்த முயற்சிக்கின்றன.
அவ்வகையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுதியாகி விட்டது.அதே போல யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் அதிமுக,பாமக மற்றும் பாஜக இடையேயான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது.பாஜக அதிமுக கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணியை விட வேகமாக செயல்பட்டு தொகுதி பங்கீடுகளையும் ஒரே நாளில் முடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்படியும் பாமக திமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த திமுக மற்றும் காங்கிரஸ் தலைமை ஏமாற்றமடைந்ததை அடுத்து தங்களுக்குள்ளான தொகுதி பங்கீடுகளை முடித்து கொண்டது.
தற்போது நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் இணையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.அதிமுக,பாமக மற்றும் பாஜக இணைந்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விட வலிமையான கூட்டணி அமைந்திருந்தாலும் தேமுதிக தலைமையுடனும் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.விரைவில் பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பேச்சு வார்த்தை இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜயகாந்தை சென்று சந்தித்தார்.அப்போதே தேமுதிக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இணைவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. அதனையடுத்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் விஜயகாந்தை சந்திக்க உள்ளார்.காங்கிரஸ் தலைவர் சந்தித்த உடனே திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்த் அவர்களை சந்திக்க திட்டமிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக திமுக கூட்டணியில் இணையுமா இல்லையா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.