உங்கள் வீட்டில் செல்வ மழை பொழிய தீபாவளி தான் உகந்த நாள்! இந்த பூஜையை தவறாமல் செய்யுங்கள்!!

0
132

உங்கள் வீட்டில் செல்வ மழை பொழிய தீபாவளி தான் உகந்த நாள்! இந்த பூஜையை தவறாமல் செய்யுங்கள்!!

தீபாவளியானது வட மாநிலங்களில் ஏழு நாட்கள் மேலாக கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜை வைத்து கொண்டாடுவர். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் லட்சுமி குபேர பூஜை. பூஜை செய்ய முடியாதவர்கள் தற்போது இந்த பதிவில் வரும் பூஜையை செய்து வழிபடலாம். தீபாவளி அன்று காலை 6 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடிக்க வேண்டும். அதற்கு முன்பே கூட பூஜையை செய்து முடிக்கலாம். இந்த பூஜையால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிகழும். ஏதேனும் மகாலட்சுமி திருவுரு படம் இருந்தால் அதன் முன்னிலையில் இந்த வழிபாட்டை செய்யலாம். சிலை வைத்திருப்பவர்கள் சிலையின் முன்னிலையில் செய்யலாம். தாம்பூல தட்டின் நடுவில் சிலையை வைக்க வேண்டும். பிறகு தாமரை மல்லி என அனைத்து பூக்களையும் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு திருவிளக்கு ஏற்றி 108 நாணயங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த 108 நாணயங்கள் ஒரு ரூபாயாகவும் 5 ரூபாயாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நாணயத்தை மகாலட்சுமி பாதத்தில் வைக்கும் போதும் ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி என கூற வேண்டும். பிறகு அந்த சில்லறை காசுகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த பூஜையை திருமணம் ஆன தம்பதியர் செய்வது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. பூஜை வைத்த காசை பீரோவில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.