அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

0
90

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ,உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் வரும் ஒன்பதாம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கூடிய ஆந்திர கடலோரப் பகுதி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் மற்றும் லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும், சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை மறுதினம் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.