மக்களின் முன்னிலையில் ஹீரோவாக  காட்சியளிக்கும் மாவட்ட ஆட்சியர்! சேலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி சம்பவம்!

0
68
District Collector who presents himself as a hero in the presence of the people! Event in Salem!
District Collector who presents himself as a hero in the presence of the people! Event in Salem!

மக்களின் முன்னிலையில் ஹீரோவாக  காட்சியளிக்கும் மாவட்ட ஆட்சியர்! சேலத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அரசின் அனைத்து உதவிகளும் அனைவருக்கும் கிடைக்கும் என தொடர்ந்து கூறி வருகின்றனர். அவற்றை காட்டும் வண்ணமாக தற்போது சேலத்தில் ஒரு nநெகிழ்ச்சி  சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொரோனா  தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக சேலத்தில் மக்கள் குறை தீர்ப்பு நடைபெறவில்லை. தற்பொழுது தொற்று பாதிப்பு குறைந்ததால் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது. அன்று வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் உதவி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரிடம் நேரடியாக மனு கொடுப்பர். அவ்வாறு  சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்தான் ராமலிங்கம். இவருக்கு வரதராஜன் என்ற மகன் உள்ளார். இவரது மகன் வரதராஜனுக்கு 22 வயது ஆகிறது.

தோற்றத்தில் சிறுவர் போலவே காட்சி அளிப்பார்.வரதராஜனுக்கு 100% கை மற்றும் கால்கள் செயல் திறன் குறைபாடு உள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்ட கொண்டு மனுக்களை பெற்று கொண்டிருந்தார். அப்பொழுது வரதராஜனின் நிலையைக் குறித்தும் கேட்டறிந்தார். வரதராஜனின் நிலையை கண்டு அவரது கோரிக்கையை ஏற்று ,உடனடியாக 6400 மதிப்பிலான சிறப்பு இரண்டு சக்கர நாற்காலியை  வழங்கினார். வழங்கியது மட்டுமின்றி அந்த நாற்காலியில் வரதராஜனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தூக்கி அதில் அமர வைத்தார்.

மேலும் குறை தீர்ப்பு கூட்டத்தில் இருந்து வெளியே வந்து வாசல் வரை அவரை  சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு கூட்டி வந்தார். அதனையடுத்து அவர் கூறியதாவது, அரசின் அனைத்து உதவிகளும் அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மாற்றுத் திறனாளி நலத்துறை வாகனத்தில் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை அனுப்பி வைத்தார். கேட்ட கோரிக்கை சம்பவ இடத்திலேயே நிறைவேற்றிக் கொடுத்ததால் ,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஒரு கடவுள் போல் காட்சி அளிக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here