பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு! 

0
145
#image_title

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு! 

போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் மாணவர்களுக்கான பயண சலுகையை கேரளா அரசு குறைத்துள்ளது.

நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்குவதை அடுத்து மாணவர்களுக்கான பயணச் சலுகை அரசால் குறைக்கப்பட்டுள்ளன.

கேரள அரசின் போக்குவரத்து கழகம் சமீப காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாக  மாணவர்களுக்கான பயண சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து துறைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் சுமார் 966 கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய வழிகாட்டுதல் படி, உச்ச வருமானம் பெற்ற வருமான வரி செலுத்தும் பெற்றோரின் குழந்தைகளுக்கான பயண கட்டணங்களில் சலுகைகள் இல்லை என தெரிவித்துள்ளது.

அடுத்து பி.பி.எல் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக பயணம் செய்ய  கட்டணம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், 25 வயதுக்கு  மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு எந்தவித பயண கட்டண சலுகையும் வழங்கப்பட மாட்டாது எனவும் கேரள அரசு போக்குவரத்து கழகம்  அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.