நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

0
124

பிம்ஸ்டெக் என்ற அமைப்பில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, இலங்கை, உள்ளிட்ட 7 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளில் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் கூட்டாக ஈடுபடுவது தொடர்பான பயிலரங்கம் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி நரவனே பங்கேற்று கொண்டார், அதில் அவர் உரையாற்றியதாவது, 2019 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் நோய் தொற்றால் பேரழிவை santhiththu இருக்கின்றோம் சில நாடுகளில் இன்னும் அதற்கான அறிவிப்பு நீடித்துக் கொண்டிருக்கிறது இந்த நோய்த்தொற்றை கையாள்வதில் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது என கூறியிருக்கிறார்.

தடுப்பூசி தயாரித்தல், தடுப்பூசி செலுத்துதல், உள்ளிட்ட பணிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படுகின்றன. நோய்த்தொற்று ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது, நோய் தொற்று பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை, புதிய உருமாறிய வகைகளை நாம் சந்தித்து வருகிறோம் என கூறியிருக்கிறார்.

இந்த நோய்த்தொற்று பரவல் வந்த பிறகு தான் நம்முடைய பேரிடர் மேலாண்மை வழிமுறைகள் பழமையானவை, தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்துவராது என்று தெரியவந்து இருக்கிறது. பேரிடர் எதிர் கொள்வதில் எந்த ஒரு அமைப்பும் தனியாக இயங்கி விட இயலாது என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுக்கொன்று உதவி தேவைப்படுகிறது என கூறியிருக்கிறார்.

தெற்காசிய பிராந்தியம் வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், வறட்சி, உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நடக்கக்கூடிய இடமாகும். திட்டமிடப்படாத நகர்புற மக்கள் சூழலியல் சீர்கேடு, பருவநிலை மாற்றம், உள்ளிட்டவை இயற்கை சீற்ற வாய்ப்புகளை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதிலும் நோய்தொற்று பின்னணியில் பேரிடர் மேலாண்மை என்பது எதார்த்தமானதாகவும், மிகப்பெரிய சவாலாகவும் மாறியிருக்கிறது.

பேரிடர் மேலாண்மை குழுவினர் முதலில் தங்களை பாதுகாத்துக் கொண்ட பிறகுதான் மற்றவர்களை பாதுகாப்பது தொடர்பாக யோசிக்க வேண்டியிருக்கிறது. நோய்தொற்று ஓய்வு பெறும் வரையில் இயற்கை சீற்றங்கள் காத்திருக்காது என்பதை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது. பேரிடர் மேலாண்மை பணிகளில் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று பேசியிருக்கிறார் நரவனே.