பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்!

0
68
Disaster caused by name confusion! Private hospital negligence!
Disaster caused by name confusion! Private hospital negligence!
Death due to lack of oxygen! High-Court condemnation!

பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காரணமாக இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை,போதிய இடவசதிஇன்மையும் சேர்ந்து மக்களை மிகுந்த மனக்கவலைகளில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தடுப்பூசி பற்றாக்குறைகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் இதுதான் சந்தர்ப்பம் என்று அதிக கட்டணம் வசூலித்து மக்களை வேறு வழிகளில் துன்புறுந்துகின்றன.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் காகாவாட் தாலுகா மோலே கிராமத்தை சேர்ந்த பாயப்பா(82).இவருக்கு சில தினங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது.சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 1 ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் மறுநாளான 2ம்தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை அடுத்து பாயப்பாவின் உடலும் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் மிகவும் கவலை அடைந்த அவரது குடும்ப உறுப்பினர்களும் அந்த உடலை வாங்கி அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து சென்று சடங்குகளை செய்தனர். பாயப்பாவின் உடலில் பிபிஇ கிட் என்று சொல்லப்படும் கொரோனா கவச உடை போடப்பட்டு இருந்ததால் உறவினர்கள் யாரும் பாயப்பாவின் முகத்தைகூட பார்க்கமுடியவில்லை.இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த பாயப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை பார்த்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதே நேரத்தில் பெலகாவி ஆட்டோ நகரை சேர்ந்த மாயப்பா என்பவரும் அதே வார்டில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பது தெரியவந்தது.இருந்தாலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றும் நிர்வாகம் கூறியது.இரு நோயாளிகளின் பெயரிலும் ஒரு எழுத்து மாறியதால் இந்த தவறு நேர்ந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.உடனே இந்த விஷயத்தை மருத்துவமனை நிர்வாகி பாயப்பாவின் குடும்பத்தினருக்கு தெரியபடுத்தி இருக்கின்றனர்.பாயப்பா உயிருடன் இருப்பதாகவும் சிகிச்சை போய் கொண்டு இருப்பதாகவும் அதனால் மருத்துவமனையில் இருந்து கொடுத்த உடலை திரும்ப தரசொல்லியும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாயப்பா இறக்கவில்லை என்று தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி காகாவாட் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் தாசில்தார் முன்னிலையில் மாயப்பாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.அதனையடுத்து இறந்த உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.உடல் மாறுவதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியபோக்கே காரணம் என்பதும் தெரிய வந்தது.தனியார் மருத்துவமனையின் இந்த அலட்சியம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.