கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!

0
145
Disaster caused by KTM Baikal! Thai Sei both died!
Disaster caused by KTM Baikal! Thai Sei both died!

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!

சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகின்றார்.கடையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கும் அதற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்திருந்தனர்.அதற்காக பூங்குழலி மற்றும் சஞ்சீவ் அவர்களுடைய குழந்தைகளுடன் காலை 4மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

மேலும் அவர்கள் அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ அருகே சாலையை கடக்க நின்று கொண்டிருந்தனர்.அப்போது சஞ்சீவ் காந்தியும் அவருடைய மகளும் சாலையை கடந்து சென்று விட்டனர்.இந்நிலையில் அவர்களுடைய பின்னால் பூங்குழலி அவருடைய எட்டு மாத குழந்தையை தூக்கி கொண்டு சாலையை கடக்க சென்றார்.அப்போது அதே பகுதியில் மின்னல் வேகத்தில் கேடிஎம் பைக் வந்து கொண்டிருந்தது.அப்போது அந்த பைக் பூங்குழலி மீது மோதியது

.அந்த விபத்தில் பூங்குழலியும் அவருடைய எட்டுமாத குழந்தையும் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர்.அந்த விபத்தில் பூங்குழலி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.மேலும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அதனையடுத்து அந்த குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானது.

இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அந்த விசாரணையில் பைக்கை ஓட்டி வந்தவர் அரும்பாக்கத்தை சேர்ந்த ஐஐடி புராஜக்ட் அசோசியேட் நிஹால் என்பது தெரியவந்தது.மேலும் அவருடன் அவருடைய தோழி கிருத்திகா இருந்தது தெரியவந்தது.

இரவு நேர விருந்துக்கு சென்று அங்கு வயிறு முட்ட மது  குடித்த நிஹால் நண்பர் வீட்டில் இருந்த அவருடைய தோழி கிருத்திகாவை பைக்கில் அழைத்து வந்ததும் அப்போது கிருத்திகா பைக்கை வேகமாக ஓட்டும்படி உற்சாகம் படுத்தியதால் அவர் வேகமாக வந்தார் என்பதும் தெரியவந்தது. அவர்களின் மீது மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்குதல்,மரணம் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K