விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

0
65

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார்.

இந்த படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதுபோல், இதற்குமுன்பு, விஜய் நடித்து வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களையும் அட்லீ இயக்கி இருந்தார். அதன்பின், இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் காரணமாக தொடர்ந்து மும்பையில் முகாமிட்டு வந்த இயக்குனர் அட்லீ தற்போது சென்னை திரும்பி உள்ளார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகிய மூவரும் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். அப்போது இவர்கள் மூவரும் ஒன்றாக செல்பி எடுப்பது போன்ற ஒரு தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.

தற்போது இந்த புகைப்படத்தை மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், ஒரு தகவலையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்த புகைப்படத்தை எடுத்தது நடிகர் விஜய் என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை வைத்து படம் இயக்கிய மூன்று இயக்குனர்களை ஒருசேர நடிகர் விஜய் எடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K