சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

0
193
#image_title

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்! 

இளைய தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்குனர் சங்கர் இயக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஆர்.சி.15 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அடுத்து சங்கர் இந்தியன் 2வை இயக்க இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லியின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து டுங்கி என்ற படமும் கைவசம் உள்ளது.

இளைய தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் 900 கோடி பட்ஜெட்டில் நீருக்கடியில் நடக்கும் அறிவியல் புனைக்கதை ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது இரண்டு ஹீரோக்கள் கொண்ட படம் என்பதால் இதில் ஷாருக்கான் மற்றும் விஜய் நடிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த படத்திற்கு மிகவும் நீண்ட காலம் ஆகும் என்பதால் ஷாருக்கான் மற்றும் விஜய்க்கு இறுதியில் அழைப்பு விடுக்கப்படும். இரண்டு பெரிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க இருக்கின்றன.

ஷங்கரின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிப்பது கட்டாயம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும். ஆனால் இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

அட்லியின் அறிமுக பாலிவுட் படமான ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.