”பலர் வரலாம்… தடுமாற்ற சொற்கள்…” வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட்

0
83

”பலர் வரலாம்… தடுமாற்ற சொற்கள்…” வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் பாடல் ஆசிரியர் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் மணிரத்னம் – ரஹ்மான் கூட்டணியின் மற்றொரு அங்கமாக இருந்த வைரமுத்து இந்த படத்தில் பாடல்கள் எழுதவில்லை. இதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய மணிரத்னம் “தமிழ் வளமான மொழி. அதில் ஏராளமான திறமையான கவிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். வைரமுத்துவோடு பல படங்களில் பணியாற்றி இருக்கிறோம். அவரைத் தாண்டியும் புதிய திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு பணியாற்றதான் இப்போது இந்த முடிவு எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

மணிரத்னத்தின் இந்த பதிலை வைத்து இயக்குனர் சீனு ராமசாமி பதிவு செய்த ட்வீட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.  அதில் ”புதியவர்கள் வருவர் போவர் ஆனால் நீங்க பீஷ்மர் #ManiRatnam sir நீங்கள் நட்டது விதை விருச்சமாகும், புதிய கவிஞருக்கு வாழ்த்துகள் ஆனால் “வைரமுத்துவை விட என நீங்கள் திறமை சிறுமை செய்தது கோவலன் கொலை தடுமாற்ற சொற்கள். உங்கள் ‘இருவர்’ காலம் கண் மை அல்ல தடம்..” எனக் கூறியுள்ளார்.