மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

0
64

கொரோனா காலத்தில் பலருக்கும் தியேட்டர் என்ற வார்த்தை மறந்திருக்கும் என்றே கூறலாம்.இந்தநிலையில் தியேட்டர்களில் இந்த மாதம் திருவிழா நடக்கப்போகிறது,எப்படினு கேக்கறீங்களா அட நம்ம மாஸ்டர் படம் தியேட்டர்ள ரிலீஸ் ஆக போகுதுங்க!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய படம்தான் மாஸ்டர்.மேலும் இப்படத்தின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13 ரிலீஸாவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இப்படத்தில் விஜய் ரசிகர்கள் பல பேருக்கு விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது.இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்சமயம் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேட்டி கொடுத்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுருக்கமாக விஜய்யின் கேரக்டர் பற்றி கூறியுள்ளார்.

இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் படத்தைப் பற்றிய வேறு எந்த ரகசியமும் வெளிவரவில்லை அதற்கேற்றவாறு படக்குழுவினரும் யாருக்கும் இன்டர்வியூ கொடுக்கவில்லை. இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் உடனே விஜய் ரசிகர்கள் அனைவரும் இருந்து வந்த நிலையில் தற்சமயம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருக்குறளை கூறுவதுபோல் இரண்டே வரியில் விஜய்யின் கேரக்டர் பற்றி கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பேராசிரியர் கதாபாத்திரம் நையாண்டியும் நக்கலும் கலந்ததாகவும், மேலும் விஜய் வரும் சீன்கள் எல்லாம் மிகவும் கெத்தாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அட விஜய்நாளே கெத்துதானப்பா!!

இயக்குனர் கூறிய இந்த கருத்துக்களைக் கொண்டு ரசிகர்கள் பலர் மாஸ்டர் படத்தை தங்களது சிந்தனையிலேயே ரிலீஸ் செய்து இருப்பார்கள்.எது எப்படியோ மக்களே “we are all waiting for our master” இதுதான் உண்மை.

author avatar
Parthipan K