கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்!

0
106

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருந்தது.

வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் கொரோனா குமார். இந்த படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தொடங்கப் படாமல் தாமதம் ஆகிக் கொண்டே வந்த இந்த படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு பதில் வேறு ஏதாவது ஒரு ஹீரோவை வைத்து படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது.

இதற்கிடையே இயக்குனர் கோகுல், ஆர் ஜே பாலாஜியை கதாநாயகனாக்கி சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முடிந்ததும், அந்த படத்தைத் தொடங்குவோம் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் படத்தில் சிம்புவே நடிப்பாரா அல்லது வேறு ஏதேனும் ஹீரோ நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.