மீண்டும் கூட்டணி அமைக்கும் இயக்குனர் கவுதம் மேனன்! இவர் தான் அந்த படத்தில் ஹீரோ!

0
93
Director Gautham Menon will form an alliance again! He is the hero of that film!
Director Gautham Menon will form an alliance again! He is the hero of that film!

மீண்டும் கூட்டணி அமைக்கும் இயக்குனர் கவுதம் மேனன்! இவர் தான் அந்த படத்தில் ஹீரோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி67 படம் உருவாக உள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் தளபதி67 படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது.அதனால் இந்த படமும் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.துப்பாக்கி 2 படத்தில் தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு நடிக்கவுள்ளார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி67 படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கப்போவாதாக தகவல் முன்னதாகவே வெளியாகியிருந்தது. இதை கவுதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கவுதம் மேனன் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.இந்த தகவலின் மூலம் இந்த படத்தில் கவுதம் மேனன் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.ஏற்கனவே இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K