இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

0
272
Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?
Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மறுப்பதாக தெரிவித்தது. இந்த மனு மீதான விசாரணையில் புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ என்பது தமிழ் எழுத்து அவ்வளவுதான். ஆனால் தமிழ் வார்த்தை இல்லை அதற்கு பொருளும் இல்லை ஐ  என்பது ஆங்கில வார்த்தை அதாவது கண் என பொருள்படும் அது எப்படி தமிழ் வார்த்தை ஆகும் எழுத்து மட்டும் தமிழில் இருந்தால் போதாது என்று கூறினார்.

மேலும் பட தயாரிப்பு தரப்போ ஐ என்பது வியப்பு மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எனவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டது. ஐ பெயரில் தமிழ் எழுத்து வார்த்தை பயன்படுத்தியதை காரணம் காட்டி வரி விலக்கு சலுகை கோர முடியாது நிமிடங்கள் பூர்த்தியாகிருக்க  வேண்டும் என தெரிவித்து இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author avatar
Parthipan K