10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!

0
83
The scorching summer sun! Holidays for schools from May 2!
The scorching summer sun! Holidays for schools from May 2!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளி  மற்றும் கல்லூரிகள் நடைபெற்றால் தொற்று பாதிப்பா அதிகரிக்கக்கூடும் என்று எண்ணி பல மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய மைக்ரான் வைரஸானது 50 மடங்கு அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால் பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தினந்தோறும் இரவு ஊரடங்கையும் வாரம் இறுதியில் முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் முதலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு அளித்தனர். தற்பொழுது நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும்படி உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 16ஆம் தேதி வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது.

இந்தியா முழுவதும் செல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாணவர்களின் பெற்றோர் எண்ணிற்கு தடுப்பூசி செலுத்தப்படும் மையம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மாணவர்களின் பெற்றோர்கள் அதன் குறுஞ்செய்தியை பார்த்து தனது பிள்ளைகளை அழைத்துச் சென்று தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். அவரை செல்லும் பொழுது ஆதார் அட்டை எடுத்துச் செல்வது கட்டாயம் என்று கூறியுள்ளனர்.