தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

0
62

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு பள்ளி அருகில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஏரியில் உள்ள மண்களை தோண்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றன. அப்போது அப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான படிமங்கள் இருப்பதனை கண்டனர்.

இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றபோது  டைனோசர் முட்டைகள் போன்ற உருவங்கள் கொண்ட ஏராளமான உருண்டை கற்கள் கிடைக்கப்பெற்றது. இது பல்வேறு அளவில் கிடைத்தனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தனர்.

பல்வேறு அளவுகளில் கிடைத்த அந்த முட்டைகள், டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நத்தை ,ஆமை, கல்மரம் துண்டு, நட்சத்திர மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் வடிவங்கள் என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்தது.

இந்த டைனோசர் முட்டைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகளில் கொண்டு ஆராய்ச்சி செய்தபோது, இது மாமிச கார்னோட்டாரஸ் மற்றும் இலைகளை மட்டும் உண்ணும் சைவ டைனோசர் முட்டையாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த டைனோசர் உயிரினங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்காவில் வாழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்த்துவிட்டு இந்த முட்டைகள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்தார். மேலும் இது டைனோசர் முட்டையை? இல்லையா? என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதுபோல பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் பகுதியில் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆராய்ச்சி நடத்தியதில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் மரம் மற்றும் கல் மரத்துண்டுகளாக காணப்படுவதாகவும் , இவை அனைத்தும் கிரிடேசியல் காலத்தில் மரமாக இருக்கலாம் என்று அவர் கூறினர்.

author avatar
Parthipan K