தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

0
101

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்த ஒரு வீரராக அறியப்படுகிறார்.

அவருடைய பேட்டிங் ஸ்டைல் மிகவும் அதிரடியாகயிருக்கும். பல சமயங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருக்கிறார். பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பராக அவர் தொடர்ந்து வருகிறார். மேலும் அவருடைய ஆட்டம் எப்போதும் போல அதிரடியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கின்ற தினேஷ் கார்த்திக் தொடர்ந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்ல,மையுடையவர் இந்த வருடம் இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்காக தினேஷ் கார்த்திக் முயற்சித்து வருகிறார்.

அவருடைய வயதை பார்க்காமல் அவர் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

அதோடு உலகக் கோப்பை போட்டியில் 6வது மற்றும் 7வது வரிசையில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை தற்போது அவர் செய்து வருகிறார் என கூறியிருக்கிறார்.

36 வயதான தினேஷ் கார்த்திக் 2019 ஆம் வருடம் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.